சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் காட்டாற்று அருவி போல தடையில்லாமல் திரையிட்ட இடங்களில் எல்லாம் இன்னும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களையும் இந்த படத்தில் இணைத்து இருந்தார் நெல்சன். அது மட்டுமல்ல நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரின் என்ட்ரியும் இந்த படத்திற்கு மிகப் பக்கபலமாக அமைந்தது,
இந்த படம் தற்போது தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய மொழிகளிலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த சாதனைகளை ஒவ்வொன்றாக தகர்த்து வருகிறது. கடந்த முதல் வாரத்தில் மட்டும் உலக அளவில் 375 கோடி வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இரண்டு வாரங்கள் முடிவடைந்த இதைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் 525 கோடி உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அந்த வகையில் ஏற்கனவே இந்த சாதனைகளை தக்க வைத்திருந்த விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை ஓவர்டேக் செய்து புதிய சாதனையை அடுத்து வருபவர்களுக்கு இலக்காக வைத்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.