லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் லியோ. திரிஷா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் படங்களை பொறுத்தவரை வில்லன்கள் எல்லாருமே பவர்ஃபுல்லாக இருப்பார்கள். அவர்களைப் போல அவர்களது பெயர்களுமே வித்தியாசமாக வைக்கப்பட்டிருக்கும். அப்படித்தான் விக்ரம் படத்தில் கிளைமாக்ஸில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு ரோலக்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு ஆண்டனி தாஸ் என பெயர் வைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் அவரது பிறந்தநாளன்று அந்தப் பெயர் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இன்று ஆக்சன் கிங் அர்ஜூனின் பிறந்தநாள் என்பதால் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த ஒரு பிலிம்ஸ் வீடியோ உடன் அவரது கதாபாத்திர பெயரை வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தில் அவர் கரோல்டு தாஸ் என்கிற பெயரில் நடிக்கிறார். அதே சமயம் படத்தில் இவர் வரும் காட்சியை பார்க்கும் போது விக்ரம் படத்தில் ரோலக்ஸ் சூர்யா என்ட்ரி கொடுத்தது போலவே இதுவும் இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.