Home News Kollywood விக்ரம் பிரபு படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக சுசீந்திரன் சீடர்

விக்ரம் பிரபு படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக சுசீந்திரன் சீடர்

 இயக்குனர் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ரமேஷ் ரவிச்சந்திரன். இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா தங்களது நிறுவனமான லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஈசா ரெப்பா கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் முக்கிய வேடத்தில் மைக்கேல் தங்கத்துரை நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கான துவக்க விழா பூஜை சென்னையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் நடைபெற்றது.

இதே பட தயாரிப்பு நிறுவனம் தான் யோகி பாபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் ‘மலை’ மற்றும் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.