V4UMEDIA
HomeNewsKollywoodஓடிடியில் வெளியாகும் பானிபூரி

ஓடிடியில் வெளியாகும் பானிபூரி

சமீபகாலமாக ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் சினிமாவுக்கு இணையாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது பானி பூரி என்கிற வெப் சீரிஸ் ஷார்ட் பிளிக்ஸ் என்கிற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள இந்த பானி பூரி’ தொடரில் லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா மற்றும் வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு, குடும்ப உறவினர்கள் மற்றும் பக்கத்து வீடு காரணமாக ஒரு ஜோடி தங்கள் உறவில் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் இந்த கதை சொல்கிறது.

பாலாஜி தனது டிரேட்மார்க்கான கதை சொல்லல் முறை, நகைச்சுவையான ஒன்-லைனர் மற்றும் அனைத்து வயதுடைய பார்வையாளர்களும் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் தொடரை அமைத்துள்ளார்.

எட்டு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சேர்ந்து வாழும் இரு நபர்களுக்கு இடையில் இருக்கும் லிவ்- இன் உறவு குறித்து ஆராய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு இடையில் செயற்கை நுண்ணறிவு தலையீடும் இருப்பதனால் என்ன ஆகிறது என்பது குறித்தும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments