சமீபத்தில் நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் தலைமையில் அவர் கைப்பற்றும் ஐந்தாவது கோப்பை இது.
இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்காக தனது கையெழுத்திட்ட பேட் ஒன்றை பலருக்கும் அனுப்பி வருகிறார் தோனி. அந்த வகையில் அப்படி ஒரு கிரிக்கெட் பேட் ஒன்றை கிரிக்கெட்டின் தீவிர ரசிகரான நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு கிப்டாக வழங்கியுள்ளார் தோணி.
தற்போது தோனி முதன்முறையாக சினிமாவில் களமிறங்கி தமிழில் எல்ஜிஎம் என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு தோனியின் மனைவி சாக்சி தான் கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்து வருகிறார்.
அந்த வகையில் யோகிபாபு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதை அறிந்து அதற்காக இந்த பரிசை அனுப்பியுள்ளார் எம்.எஸ்.தோனி. எல்ஜிஎம் படப்பிடிப்பில் இருந்த யோகிபாபுவுக்கு இந்த கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டபோது இதை ஆச்சரியத்துடன் பெற்றுக்கொண்ட யோகிபாபு அதை முத்தமிட்டும் காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும் லவ் டுடே புகழ் இவானா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் நதியா நடிக்கின்றார்.