V4UMEDIA
HomeNewsKollywoodசூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இலங்கை துணை தூதர் சந்திப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இலங்கை துணை தூதர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்டு, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இலங்கைக்கு சுற்றுப்பயணம் வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை இணைத்தூதர் வெங்கடேஸ்வரன்,

சென்னை போயஸ் கார்டன் வீட்டிற்கு நேரிலேயே வருகை தந்த அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராமாயண இதிகாசத்தில் தொடர்புடைய புனித தலங்களையும் இதர பாரம்பரிய கலாச்சார மற்றும் மத சின்னங்களை பார்வையிடவும் இலங்கைக்கு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்தின் வருகையால் இந்தியா, இலங்கை இரு நாடுகளின் சுற்றுலா வளர்ச்சி, திரைப்பட வளர்ச்சி ஆகியவை இன்னும் மேம்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தன் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு இலங்கை வருவதாக அவரிடம் உறுதி அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தபோது சில அரசியல் காரணங்களால் எழுந்த எதிர்ப்புகளால் அப்போதைக்கு அந்த பயணத்தை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments