HomeNewsKollywoodவிஜய்யின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நாசரின் தம்பி

விஜய்யின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நாசரின் தம்பி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். குறிப்பாக சில எதிர்பாராத நட்சத்திரங்களை இந்த படத்தில் அழைத்து வந்து நடிக்க வைத்து உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அந்த வகையில் நடிகர் நாசரின் சகோதரர் ஜவஹர் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக நாசரின் தம்பியும் சில படங்களில் நடித்து வந்தார். ஜிவி 2, பனி விழும் மலர்வனம் உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் தற்போது லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது அவரே இந்த தகவலை தெரிவித்துள்ளார். காஷ்மீரில் நடைபெற்று முடிந்த படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 40 நாட்கள் கலந்து கொண்டு தான் நடித்ததாகவும் மிக முக்கியமான கதாபாத்திரம் தன்னுடையது என்றும் அது குறித்து வேறு விஷயங்களை கூறமுடியாது என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார் ஜவஹர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments