தமிழ் சினிமாவில் 75 வருட பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். இதை துவங்கியவர் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். அதற்கு பிறகு அவரது மகன்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன் இந்த நிறுவனத்தை திறம்பட நடத்தி வந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் அனைவரையும் வைத்து படம் தயாரித்தார். கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மெகா ஹிட் திரைப்படமான சிவாஜி படத்தை தயாரித்ததுடன் பட தயாரிப்பில் இருந்து ஏவிஎம் நிறுவனம் சற்று ஒதுங்கியே நின்றது.
இந்த நிலையில் தற்போது ஏவிஎம் சரவணன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். குறிப்பாக அவருக்கு கைகளில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக கட்டு போடப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று ஏவயோ எம் சரவணனை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏவிஎம் நிறுவனம் இருவருக்குமே ஆஸ்தான இயக்குனரான எஸ்.பி.முத்துராமன் உடன் இருந்தார்.
சில தினங்களுக்கு முன்புதான் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஏவி. எம் சரவணனை நேரில் சென்று நலம் விசாரித்தால் என்பது குறிப்பிடத்தக்கது.