நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்ப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே சமயத்தில் அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வெளியாகும் என இதற்கு முன்பே அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஜெயிலர் படம் கிட்டத்தட்ட இதே தேதியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் மாவீரன் ரிலீஸ் தேதியில் நிச்சயம் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்பட்டு வந்தது.
அதற்கு ஏற்றார்போல் மாவீரன் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டு, 27 நாட்களுக்கு முன்பாகவே அதாவது ஜூலை 14ஆம் தேதியே வெளியாகும் என புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வெற்றி பெற்ற மண்டேலா என்கிற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.