V4UMEDIA
HomeNewsKollywoodமாநாடு - கஸ்டடி படங்களுக்கு இடையே உள்ள ஆச்சரிய ஒற்றுமை

மாநாடு – கஸ்டடி படங்களுக்கு இடையே உள்ள ஆச்சரிய ஒற்றுமை

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மாநாடு. அதை தொடர்ந்து தற்போது தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் நாகசைதன்யாவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்கும் சில ஆச்சரிய ஒற்றுமைகள் இருக்கின்றன.

மாநாடு திரைப்படம் 24 மணி நேரத்தில் நடக்கும் கதையாக உருவாகி இருந்தது. இந்த கஸ்டடி திரைப்படம் 48 மணி நேரம் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. அதேபோல மாநாடு படத்தில் கதாநாயகன் சிம்புவை சாக விடாமல் பார்த்துக் கொள்வது போலீஸ் அதிகாரியான வில்லன் எஸ்ஜே சூர்யாவின் வேலையாக இருந்தது.

இந்த கஸ்டடி படத்தில் வில்லன் அரவிந்த்சாமியை சாக விடாமல் பார்த்துக் கொள்வது தான் போலீஸ் கான்ஸ்டபிள் ஆன நாயகன் நாக சைதன்யாவின் வேலை என்று இயக்குனர் வெங்கட்பிரபு ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments