V4UMEDIA
HomeNewsKollywoodகமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் படம் துவங்கியது

கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் படம் துவங்கியது

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே யாரும் எதிர்பாராத விதமாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பணியாற்றியவரும் ரங்கூன் படத்தின் இயக்குநருமான ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார் என்றும் இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார் என்றும் அப்போதே அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் இந்தப்படம் இன்று துவங்கப்பட்டுள்ளது இது குறித்த வீடியோ ஒன்றை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் இந்த படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கமல்ஹாசன் இந்த படத்திற்கு கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.

Most Popular

Recent Comments