சமீபத்தில் கவின், அபர்ணாதாஸ் இணைந்து நடித்த டாடா என்கிற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பல பிரபலங்களும் கூட இந்த படத்தை சிலாகித்து பாராட்டி வருகின்றனர்.
நடிகர் தனுஷை பொருத்தவரை திறமை உள்ள வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கவும் பாராட்டவும் தயங்காதவர். சில சமயங்களில் அப்படி பல பேரை தானே கை கொடுத்து முன்னேற்றியும் இருக்கிறார். அந்த வகையில் இந்த நிலையில் இந்த டாடா படத்தை பார்த்துவிட்டு கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் தனுஷ். இதை இந்த இருவருமே தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
அதிலும் நடிகர் கவின் தனுஷ் பாராட்டியது பற்றி குறிப்பிடும்போது டாடா படத்தை பார்த்த பிறகு தனுஷ் சாரிடம் இருந்து எனக்கு போன் வந்தது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான தருணம். அவரது அனைத்து படங்களையும் பார்த்து அவரது திறமையை பார்த்து வியந்து திகைத்துப் போனவன் நான். இன்று அவரிடமிருந்து ஒரு வாழ்த்து பெற்றதை பாக்கியமாகக் கருகிறேன்” என்று கூறியுள்ளார்.
அதேபோல கதாநாயகி அபர்ணா தாஸ் எங்களைப் போன்ற வளரும் கலைஞர்களை பாராட்டும் உங்கள் மனதிற்கு மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.
இந்த படத்தை கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றி எந்த அளவுக்கு உறுதி செய்யப்பட்டது என்றால் படம் வெளியான மறுநாளே லைகா நிறுவனத்தில் இந்த படத்தின் இயக்குனருக்கு தனது இரண்டாவது படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்து ஒப்பந்தமும் போடப்பட்டது என்பதுதான்.