HomeNewsKollywoodதெலுங்கில் பவன் கல்யாணை வைத்து படம் இயக்கும் சமுத்திரக்கனி 

தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து படம் இயக்கும் சமுத்திரக்கனி 

மனதில் பட்டவற்றை துணிச்சலாக பேசுவது மட்டுமல்ல, அவற்றை தான் இயக்கும், நடிக்கும் படங்களிலும் கூட ரசிகர்களுக்கு உரக்கச் சொல்லி வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இயக்குனராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறிய பின்பு தற்போது தென்னிந்திய அளவில் பிசியாக நடிகராக வலம் வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அவருக்கென ஒரு தனி மார்க்கெட்டே உருவாகி உள்ளது.

இந்த நிலையில் கடந்த வருடம் வினோதய சித்தம் என்கிற படத்தை அவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதையின் நாயகனாக தம்பி ராமையா நடித்திருந்தார். தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானாலும் கூட இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டை பெற்றது.

இப்படி ஒரு சிறிய பட்ஜெட் என்கிற அளவில் வெளியான இந்த படம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பவன் கல்யாணுக்கு பிடித்து போனதுதான் ஆச்சரியம். இந்த படம் வெளியான சமயத்தில் இருந்து தெலுங்கில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடித்து ரீமேக் செய்ய பல மாதங்களாக திட்டமிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக தனது கால்சீட்டை ஒதுக்கி தந்துள்ளார் நடிகர் பவன் கல்யாண்.

தற்போது இந்த படத்திற்கான பூஜை நடைபெற்று படப்பிடிப்பு உடனடியாக துவங்கியுள்ளது.  தெலுங்கிலும் இந்த படத்தை சமுத்திரக்கனியே இயக்குகிறார். வசனங்களையும் திரைக்கதையையும் பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் எழுதுகிறார். வழக்கம் போல தெலுங்கில் இந்த படத்திற்காக பல மாற்றங்களை செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது 

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments