V4UMEDIA
HomeNewsKollywoodகாஷ்மீர் குளிருக்கு இதமாக லியோ குழுவினர் பற்ற வைத்த நெருப்பு

காஷ்மீர் குளிருக்கு இதமாக லியோ குழுவினர் பற்ற வைத்த நெருப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மீண்டும் இணைந்திருக்கும் படம் லியோ. மாஸ்டர் போன்று, விக்ரம் போன்று இந்த லியோ படம், இன்னும் அதைவிட அதிரடியாக இருக்கும் என ரசிகர்கள் இப்போது இருந்தே எதிர்பார்க்கத் துவங்கியுள்ளனர்.

தற்போது காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். நிறைய நட்சத்திரங்கள் இருந்தாலும் தற்போது இயக்குனர் கௌதம் மேனன், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை திரிஷா கலந்து கொண்டார்.

தற்போது கடும் குளிர் நிலவுவதால் படப்பிடிப்பு முடிந்து இரவு நேரங்களில் குளிரை சமாளிப்பதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவின் அனைவருமே நெருப்பு மூட்டி அதில் குளிர்காய்ந்து வரும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. படக்குழுவினருடன் தானும் ஒரு நபராக விஜய் எளிமையாக கலந்து பழகுவதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Most Popular

Recent Comments