இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் சூரி கதை நாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இதுநாள் வரை, தான் இயக்கிய படங்களில் ஜிவி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் என இருவருடன் மட்டும் மாறி மாறி பணிபுரிந்து வந்தார் இயக்குனர் வெற்றிமாறன். முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இந்த படத்திற்காக இணைந்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க தனுஷ் தனது படங்களில் பாடும் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி பல மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் கூட மேகம் கருக்காதா என்கிற பாடலை அழகாக பாடியிருந்தார்.
இந்த நிலையில் வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகராக இருக்கும் தனுஷுக்கு அவரது படத்திற்காக பாடும் வாய்ப்பும் அதேசமயம் இளையராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பு சேர்ந்து இந்த விடுதலை படத்திற்காக தேடி வந்தால் விடுவாரா தனுஷ் ?
தற்போது இளையராஜா இசையில் ‘உன்னோட நடந்தா’ என்கிற பாடலை பாடியுள்ளார் தனுஷ். இந்த பாடலை தனுஷுடன் இணைந்து அனன்யா பட் என்பவரும் பாடியுள்ளார் இந்த பாடல் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகிறது.
தற்போது இந்த பாடல் தொடர்பான மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இந்த பாடலை எப்படி பாட வேண்டும் என இளையராஜா தனுஷுக்கு சொல்லித்தருவது அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.