விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. அதைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்கிற படத்தை இயக்கி இளம் ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தார். இந்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள மைக்கேல் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார் கதாநாயகியாக திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை தீப்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ரெஜினா கசான்ட்ரா, தயாரிப்பாளர்கள் சிவி குமார், எஸ் ஆர் பிரபு, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்வில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசும்போது, “இந்த படத்தில் கொஞ்ச நேரமே வந்து போகும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது அதில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரிடம் கேட்டேன். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே சம்மதம் தெரிவித்து விட்டார்.
படத்தின் தயாரிப்பாளர்கள் கூட விஜய்சேதுபதி இதில் நடிப்பாரா என கேட்டபோது அவருக்கு உடனடியாக போன் செய்து இந்த விஷயத்தை கூறினேன். அவர் உடனே தயாரிப்பாளரிடம் போனை கொடுக்க சொல்லி, ரஞ்சித் ஜெயக்கொடி படம் என்றால் நான் கட்டாயம் இருப்பேன் என்று நம்பிக்கை அளித்தார் என்று கூறினார்.