V4UMEDIA
HomeNewsKollywoodவாண்டட் ஆக கொட்டேஷன் கேங்கில் நுழைந்த பிரியாமணி

வாண்டட் ஆக கொட்டேஷன் கேங்கில் நுழைந்த பிரியாமணி

பருத்திவீரன் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணியை ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டாலும் கூட தனக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்கள் தேடி வந்தால் இப்போது மறக்காமல் நடித்து வருகிறார் பிரியாமணி,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்பல்லவி உடன் இணைந்து விராட பருவம் என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா கதாநாயகனாக நடித்து வரும் கஸ்டடி படத்திலும் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரியாமணி நடித்துள்ள கொட்டேஷன் கேங் என்கிற படம் ஒன்று விரைவில் வெளிவர தயாராகி வருகிறது, பல மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி மற்றும் சாரா அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் இந்த படத்தை இயக்குனர் விவேக் கே கண்ணன் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது.

இந்த படம் குறித்து இயக்குனர் கூறும் போது இந்தப் படம் கேங் வார் குறித்தானது கிடையாது ஆனால் Quotation Gang உணர்ச்சி மிகுந்த கதையாக இருக்கும். பணத்துக்காக கொலை செய்யக்கூடிய கொலைகாரர்கள் பற்றிய கதையாக இது இருக்கும். இது ஆக்‌ஷன் பற்றிய கதை கிடையாது ஆனால் அங்கிருக்கும் வாழ்க்கையின் உணர்ச்சிகளைக் கொண்டது. சென்னை, மும்பை மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் ஹைப்பர்லிங்க் எமோஷனல் ட்ராமாவாக உருவாக்கி உள்ளோம். இந்த கதையை கோவிட் காலத்திலும் படமாக்கி உள்ளோம்.

ஏற்கனவே, நான் பிரியாமணியுடன் ஒரு புராஜெக்டில் வேலை செய்ய வேண்டி இருந்தது. நான் எப்போது இந்த கதையை அவரிடம் சொன்னேனோ அவருக்கு கதை பிடித்துப் போய் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதேபோல, ஜாக்கி ஷெராப் கதைக்கு உள்ளே வந்ததும் இது பான் இந்தியா படமாக மாறியது” என்றார். மேலும், “படத்தில் சன்னி லியோன் தீவிரமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அர்பணிப்பும் கடின உழைப்பும் மிகச் சிறந்ததாக இருந்தது. சாரா அர்ஜூன் இதுவரை கண்டிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் மற்றொரு ஹைலைட்டாக ட்ரம்ஸ் சிவமணி இசை அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments