கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இதற்கு முன்னதாக விக்ரமும் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்த மகான் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு தனது இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் இயக்க ஆரம்பித்தார் கார்த்திக் சுப்புராஜ்,
இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ், வில்லனாக எஸ்ஜே சூர்யா என ஒரு மாஸ் காம்போ இணைந்து நடித்துள்ளனர், இதில் எஸ் ஜே சூர்யா ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் இறைவி படத்தில் கதாநாயகனாக நடித்தவர்,
இந்த ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக மும்முரமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தகவலை நடிகர் எஸ்ஜே சூர்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “என்ன ஒரு கான்செப்ட் என்ன ஒரு செட், என்ன ஒரு போட்டோகிராபி, என்ன ஒரு பிரம்மாண்டம், என்ன ஒரு தயாரிப்பு வேல்யூ.. அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி” என்று கூறியதுடன் ராகவா லாரன்ஸுடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நான் பார்த்த ஒரு அற்புத உள்ளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.