V4UMEDIA
HomeNewsKollywoodவிதார்த் -கிஷோர் இணைந்து நடிக்கும் காகங்கள்  

விதார்த் -கிஷோர் இணைந்து நடிக்கும் காகங்கள்  

வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர்; ஒரு வாழ்வு எப்படி இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் ‘மர்மமான முறையில்’ எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது, போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக உருவாக இருக்கும் படம் காகங்கள்.

இந்த படத்தை ஆனந்த் அண்ணாமலை இயக்குகிறார் இந்த படத்தில் கிஷோர், ஜெய்பீம் புகழ் நாயகி லிஜோமோல் ஜோஸ், விதார்த், குரு சோமசுந்தரம், யோகிபாபு, இளவரசு, உள்ளிட்டவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில், எம்.எஸ்.கிருஷ்ணாவின் இசையில், ராமு தங்கராஜின் கலை இயக்கத்தில், அந்தோணி பிஜே ரூபனின் ஒலி வடிவமைப்பில், டீனா ரொசாரியோவின் ஆடை வடிவமைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் பண்டிகைக்கு பின்னர் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெறவுள்ளதாக படகுழுவினர் கூறியுள்ளனர்.

Most Popular

Recent Comments