V4UMEDIA
HomeNewsKollywood20 மில்லியன்களை கடந்த வா வாத்தி பாடல்

20 மில்லியன்களை கடந்த வா வாத்தி பாடல்

இந்த வருடம் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், மாறன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது, குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது,

அடுத்த வருடம் துவக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் நுழைந்து தெலுங்கு இயக்குனர், தெலுங்கு தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படம் தெலுங்கில் சார் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து வா வாத்தி என்கிற லிரிக் பாடல் வெளியானது. இந்த பாடலை நம்ம பொயட்டு தனுஷ் தான் எழுதியுள்ளார். ஸ்வேதா மோகன் இந்த பாடலை பாடியுள்ளார்.

இப்போதுவரை இந்த பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களால் யூடியூப் வலைதளத்தில் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலும் ரவுடி பேபி. தாய்க்கிழவி பாடல்களை போல மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments