மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் தி கிரேட் இண்டியன் கிச்சன். கணவன் மற்றும் மாமனார் மட்டுமே உள்ள வீட்டில் வாழ்க்கைப்படும் ஒரு படித்த பெண் தனக்கான எதிர்பார்ப்புகள் தனது எதிர்காலம் என எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு குடும்பமே உலகம் என வாழும் சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.

ஒரு கட்டத்தில் அதை எப்படி உடைத்துக் கொண்டு அவன் சுதந்திர நடை போடுகிறாள் என்பதே இந்த படத்தின் கதை/ மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை இயக்குனர் கண்ணன் தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்து இயக்கியுள்ளர்.

இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளர். இந்த படம் தயாராகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த படம் வரும் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.