Home News Kollywood மோகன்லால் பட டைட்டிலை கைப்பற்றிய ஆர் ஜே பாலாஜி

மோகன்லால் பட டைட்டிலை கைப்பற்றிய ஆர் ஜே பாலாஜி

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் என தொடர்ந்து நகைச்சுவை கலந்த குடும்ப படங்களில் நடித்து குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் ஒரு கதையின் நாயகனாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டவர் ஆர் ஜே பாலாஜி.

இந்த நிலையில் தற்போது முதன்முறையாக திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இதுவரை பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இந்த படத்திற்கு தற்போது ரன் பேபி ரன் என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான திரில்லர் படத்திற்கு இது பொருத்தமான டைட்டில் தான். அதே சமயம் இதே டைட்டிலில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மோகன்லால், அமலாபால் நடிப்பில் மலையாளத்தில் ரன் பேபி ரன் என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை இயக்குனர் ஜியேன் கிருஷ்ண குமார் என்பவர் இயக்கி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான தியான் என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.