தற்போது தெலுங்கு, தமிழில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடித்து முடித்துவிட்டார் தஹ்லபதி விஜய். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மிக முக்கியமான நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்.
விஜய்யுடன் யோகிபாபு இணைந்து நடிக்கும் எட்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சர்க்கார், பிகில், பீஸ்ட் என தொடர்ந்து விஜய்யின் படங்களில் இடம்பெற்ற பங்களித்து வருகிறார் யோகிபாபு.
யோகிபாபுவை பொறுத்தவரை அவரை ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு கிரிக்கெட் வீரராகவும் பலருக்கும் தெரிந்திருக்கும். படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும், சில நேரங்களில் படப்பிடிப்பு இடைவேளைகளில் கூட அவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் அவ்வப்போது வெளியாவதுண்டு.
இந்த நிலையில் அவருக்குள் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தை உணர்ந்தோ என்னவோ, தளபதி விஜய் அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசளித்துள்ளார்.
இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள யோகிபாபு, “இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.