V4UMEDIA
HomeNewsKollywoodவீரன் படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி

வீரன் படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆல்பம் மூலம் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. சில படங்களுக்கு இசையமைத்து வந்தவர், ஒரு கட்டத்தில் ஹீரோவாக அறிமுகமாகி வெற்றிகரமான நடிகராகவும் வலம் வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இரட்டை வேடங்களில் நடித்த அன்பறிவு படம் வெளியாகி வெளியானது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இதே நிறுவனத்தின் தயாரிப்பில் வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இந்த படத்தை ஏ ஆர் கே சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் மிகப்பெரிய வெற்றிபெற்ற மரகதநாணயம் படத்தை இயக்கியவர்.

தற்போது வீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இது குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் விரைவில் துவங்க உள்ளன.

Most Popular

Recent Comments