மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் பிரித்திவிராஜ் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக வெற்றிகரமான இயக்குனராகவும் அடி எடுத்து வைத்தார்.
இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலையும் தாண்டி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மோகன்ராஜாவை தொலைபேசியில் அழைத்து இந்தப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு அவரை மனம் விட்டு பாராட்டியுள்ளார்.

குறிப்பாக மலையாள ஒரிஜினல் இருந்து காட்பாதருக்காக மோகன்ராஜா செய்த மாற்றங்களையும் குறிப்பிட்டு தனித்தனியாக ஒவ்வொன்றையும் பாராட்டியது மோகன்ராஜாவை ரொம்பவே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் மோகன்ராஜா. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும் மிக முக்கியமான வேடத்தில் மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் சல்மான்கானும் நடித்திருந்தது படத்திற்கு இன்னும் கூடுதல் அம்சமாக அமைந்து விட்டது என்பதும் உண்மை.


























