தளபதி விஜய்யின் 30 வருட திரையுலக பயணத்தில் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரது வெற்றியின் பின்னணியில் தூண்களாக தங்களது பங்களிப்பைத் தந்துள்ளனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் என்றால் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்பி சௌத்ரியை கூறலாம் இவரது தயாரிப்பில் பூவே உனக்காக படத்தில் துவங்கி லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் விஜய் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் விஜய் நடிப்பாரா என்கிற கேள்விக்கு நடிகரும் ஆர்பி.சௌத்ரியின் மகனுமான ஜீவா பதில் கூறியுள்ளார்.
ஜீவா தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோவான சர்க்கார் வித் ஜீவா என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதன் முதல் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.
ஒவ்வொரு வாரமும் நான்கு பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நோ ரூல்ஸ் கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார் ஜீவா. இந்த நிலையில் இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜீவா பேசும்போது, ‘எல்லோரும் SMS பட ஜீவாவை மீண்டும் எப்போது பார்க்கலாம் என்று கேட்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் என்னை மீண்டும் அப்படி பார்ப்பது மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் விளையாட்டின் விதிகளை வளைக்கும் ஆற்றலுடன் இயங்கும், ஒரு இனிமையான தொகுப்பாளராகவும் பார்ப்பார்கள். சர்க்கார் எனும் இந்த கேம் ஷோவினை நான் மிகவும் ரசித்தேன், என் ரசிகர்களும் இதை விரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்
அப்போது அவரிடம் விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் விஜய் நடிப்பாரா என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த விஜய் கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்தால் நிச்சயமாக விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல அதிர்ஷ்டம் எனக்கு இருந்தால் கதையும் அமைந்தால் அந்த படத்தில் நானும் அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் ஜீவா