HomeNewsKollywoodமாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய வடிவேலு

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய வடிவேலு

தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக நடித்து வரும் வடிவேலு தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தமிழக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார். உலகெங்கிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த பத்து வருடமாக இவர் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தபோதும் இவருக்கான வரவேற்பு கொஞ்சமும் குறையவில்லை.

தொலைக்காட்சியிலும் இணையதளங்களிலும் இவரது நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. இந்தநிலையில் தற்போது முன்னைப்போல முழுவீச்சுடன் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் வடிவேலு.

அப்படி அவர் நடித்துவரும் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் மாமன்னன் படமும் ஒன்று. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வில்லனாக பஹத் பாசில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சேலத்தில் நடைபெற்றுவரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொண்டபோது படக்குழுவினர் அவரை கேக் வெட்ட செய்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவரது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments