அமரர் கல்கி எழுதி பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்ட, மிகவும் நேசிக்கப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். நான்கு பாகங்களைக் கொண்ட இந்த நாவலை பல வாசகர்கள் நான்கைந்து முறைக்கும் மேல் வாசித்து உள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த நாவலை படமாக்கும் முயற்சி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே கடந்த 50 வருடங்களாக தொடர்ந்து முயற்சிக்கப்பட்டு வந்தது.
இறுதியாக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது, ‘பொன்னியின் செல்வன் நாவல் 2000 பக்கத்திற்கு அதிகமாக இருப்பதால் அதை வாசிக்காமல் விட்டுவிட்டேன்.. ஒரு சமயம் ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை யார் செய்தால் நன்றாக இருக்கும் என கேட்டபோது அவர் ரஜினிகாந்திடம் என் பெயரைக் கூறினார் அப்போது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது இந்த படத்தில் இந்த நாவலில் இடம்பெற்றுள்ள நந்தினி என்ற கதாபாத்திரத்தை இன்ஸ்பிரேஷனாக கொண்டுதான் படையப்பா படத்தில் உள்ள நீலாம்பரி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் கமல் பேசும்போது, ‘ஒரு கட்டத்தில் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் நான் இறங்கியபோது என்னை அழைத்த சிவாஜி கணேசன், இந்த படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வை என்று கூறினார்” என்கிற ஒரு புதிய தகவலை வெளியிட்டார்.
மேலும் எம்ஜிஆர் வைத்திருந்த பொன்னியின் செல்வன் நாவலின் திரைப்பட உரிமையை அவரிடம் என்று நான் வாங்கினேன்.. சில முயற்சிகளுக்குப் பிறகு அதில் முன்னேற்றம் இல்லை.. என்னிடம் இருந்து இந்த கதை பல பேரிடம் சென்றது. இப்போது மணிரத்னம் அதை பூர்த்தி செய்து விட்டார்” என்று கூறினார்