HomeNewsKollywoodகதாநாயகிகளே இல்லாத படத்தில் நடிக்கும் சிபிராஜ்

கதாநாயகிகளே இல்லாத படத்தில் நடிக்கும் சிபிராஜ்

நடிகர் சத்யராஜின் மகனாக திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமான சிபிராஜ் இத்தனை வருடங்களில் மிகப்பெரிய வெற்றி என சொல்லிக்கொள்ளும்படியான படம் எதையும் கொடுக்காவிட்டாலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக இப்போதுவரை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

அந்தவகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் நடித்த ரங்கா, மாயோன், வட்டம் ஆகிய படங்கள் தொடர்ந்து வெளியாகின. இந்த நிலையில் தற்போது இளையராஜா கலியபெருமாள் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்தார் சிபிராஜ்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் இவருக்கு ஜோடியே இல்லை. அதேசமயம் இந்தப் படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் சிபிராஜ். இந்த படத்தின் கதை 25 கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. .

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments