V4UMEDIA
HomeNewsKollywoodதிரையரங்குகள் மூடப்படுவது ஏன் ? மாதவன் சொல்லும் காரணம்

திரையரங்குகள் மூடப்படுவது ஏன் ? மாதவன் சொல்லும் காரணம்

நடிகர் மாதவன் ஒரு இயக்குனராகவும் மாறி இயக்கிய ராக்கெட்ரி ; தி நம்பி எஃபெக்ட் என்கிற திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த படம் தேச துரோக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் தன்னை நிரபராதி என போராடி நிரூபித்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் தான் மாதவன் நடித்திருந்தார். இந்த படம் தனக்கு வசூல் ரீதியாகவும் திருப்தி அளிக்கிறது என்று கூறியுள்ள மாதவன் பல இடங்களில் திரையரங்குகள் மூடப்பட்டு வருவதற்கான காரணத்தையும் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தெரியப்படுத்தினார்.

மக்கள் படம் நன்றாக இல்லை என்பதற்காக தியேட்டருக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள் என்பதில் முழு உண்மை இல்லை.. அவர்கள் இப்போதெல்லாம் தங்களுக்கு வசதியான எல்லா கட்டமைப்புகளும் கொண்ட தியேட்டர்களில் தான் படம் பார்க்க விரும்புகிறார்கள். அந்த அடிப்படை வசதிகளை செய்யாத திரையரங்குகளை அவர்கள் நாடுவதில்லை.

அதனால் அந்த தியேட்டரில் படம் பார்க்க கூட்டம் வருவதில்லை. இதனால் படங்கள் ஓடுவதில்லை என நினைத்துக் கொண்டு பல தியேட்டர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளாமல் திரையரங்குகளை மூட ஆரம்பித்து விட்டனர். இதுதான் நிதர்சனம்” என்று கூறியுள்ளார்

Most Popular

Recent Comments