நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சமீபத்தில் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல அந்த படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கும் தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில் நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் சூர்யா, ஜிவி பிரகாஷ் இருவரையும் அழைத்து கௌரவித்துள்ளது.
இந்த நிகழ்வில் தற்போது தான் தயாரித்து தம்பி கார்த்தி நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விருமன் படத்தில் லாபத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார் நடிகர் சூர்யா
இந்த நிகழ்வின் போது நடிகர்கள் நாசர், கார்த்தி, சச்சு, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.