HomeNewsKollywoodகௌதம் கார்த்திக் நடிக்கும் 1947 பட டீசர் வெளியானது

கௌதம் கார்த்திக் நடிக்கும் 1947 பட டீசர் வெளியானது

நடிகர் கார்த்திக்கின் மகனாக வாரிசு நடிகராக கௌதம் கார்த்திக் அறிமுகமானாலும் அறிமுக காலகட்டத்தில் சில படங்களில் நன்றாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அதன்பிறகு கதை தேர்வில் கவனம் செலுத்துவது தவறியதாலோ என்னவோ சமீபகாலமாக அவரது படங்கள் ரசிகர்களை கவரவில்லை படம் வெளியாவதிலும் ஒரு இடைவெளி விழுந்து விட்டது.

இந்த நிலையில் அதை சரி செய்யும் விதமாக தற்போது சிம்புவுடன் இணைந்து பத்து தல என்கிற படத்திலும் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஆகஸ்ட் 16 1947 என்கிற படத்திலும் நடித்து வருகிறார் கௌதம் கார்த்திக் .

இதில் ஆகஸ்ட் 16 1947 என்கிற படத்தை என்.எஸ்.பொன்குமார் என்பவர் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த நாள் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராக நடித்துள்ளார் கௌதம் கார்த்திக்.

இந்த படத்தின் டீசரும் அதில் இடம்பெற்றுள்ள வசனங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments