கார்த்தி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விருமன் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.. கொம்பன் படத்திற்கு பிறகு முத்தையா, கார்த்தி கூட்டணியில் உருவாகி இருந்த இந்த படம் முதல் நாளே ரசிகர்கள் வரவேற்புடன் வெற்றி பெற்றதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். மேலும் படத்தின் நாயகன் கார்த்தியுடன் சேர்ந்து அந்த வெற்றியை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியை படத்தின் தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் மற்றும் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் இருவரும் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து இந்த படத்தின் வெற்றியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
சங்கரின் மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் தனது பயணத்தை துவக்கியுள்ளார்.
இந்த படத்தில் அவரது நடிப்புக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது குறித்து மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் அதிதி.