V4UMEDIA
HomeNewsKollywoodசாண்டி மாஸ்டரிடம் கார்த்தி வைத்த கோரிக்கை

சாண்டி மாஸ்டரிடம் கார்த்தி வைத்த கோரிக்கை

குட்டிப்புலி இயக்குனர் முத்தையா டைரக்ஷனில் கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் விருமன். இயக்குனர் ஷங்கரின் மகன் அதிதி ஷங்கர் கதாநாயகியாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, சரண்யா என முன்னணி நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இந்தப் படத்தில் இசை வெளியீட்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் பத்திரிகையாளர்களையும் சந்தித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது இந்த படத்திற்கு நடனம் அமைத்துள்ள சாண்டி மாஸ்டர் பேசும்போது ஒரு புதிய தகவலை குறிப்பிட்டார். அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு தசைகள் இறுக்கமாக இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி ஒரு நடனம் வேண்டும் என கார்த்தி சார் கூறியிருந்தார. அதற்கு ஏற்றபடி நடனம் அமைத்திருக்கிறேன். அதிதியும் முதல் படம் போல இல்லாமல் இயல்பாக நடனம் ஆடி இருக்கிறார்” என்றார் சாண்டி மாஸ்டர்.

Most Popular

Recent Comments