V4UMEDIA
HomeNewsKollywoodஜென்டில்மேன் 2வில் மகளுடன் இணைந்து தோட்டா தரணி

ஜென்டில்மேன் 2வில் மகளுடன் இணைந்து தோட்டா தரணி

இயக்குனர் ஷங்கர் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகிய ஜென்டில்மேன் படத்தை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். அதன்பிறகு தொடர்ந்து பிரமாண்ட படங்களை தயாரித்தவர் ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவிற்குள் தயாரிப்பாளராக நுழைந்துள்ள குஞ்சுமோன் தனக்கு அடையாளம் தந்த ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு இன்னும் கதாநாயகன் மட்டும்தான் அறிவிக்கப்படவில்லை. படத்தின் நாயகிகள், இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குனர் என சீரான இடைவெளியில் ஒவ்வொருவராக அறிவித்து சஸ்பென்ஸை உடைத்து வந்தார் குஞ்சுமோன்.

இந்தநிலையில் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக தோட்டா தரணியும் அவரது மகள் ரோகிணியும் இணைந்து பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கே.டி.குஞ்சுமோன் வெளியிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments