அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் மகிழ்திருமேனி. தடையறத்தாக்க, அதைத்தொடர்ந்து தடம் என இரண்டு படங்களை கொடுத்து அருண் விஜய்யின் திரையுலக பயணத்தை திசைதிருப்பி அவரது மார்க்கெட்டை உயர்த்தியவர் மகிழ்திருமேனி.

குறிப்பாக தடம் படத்தில் இரண்டு வேடங்களில் அருண் விஜய் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

ஆதித்யா ராய் கபூர் அருண் விஜய்யின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிருணாள் தாக்கூர் மற்றும் அதிதி ராவ் ஹைதரி இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இந்த படத்தை முரட கேதனி என்பவர் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இன்று அருண்விஜய் இந்த ஹிந்தி ரீமேக் படக்குழுவினரை சந்தித்துள்ளார் இதுகுறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது


























