தற்போது நடிகர் விஷால் தான் நடித்து வரும் லத்தி படத்தின் இறுதிகட்ட பணிகளை கவனித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக அவர் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தில் அவருடன் வில்லனாக எஸ்.ஜே சூர்யா மோதுகிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். விஷால் நடித்த எனிமி படத்தை தயாரித்த வினோத் குமார் தனது மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க முக்கிய வேடங்களில் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். லத்தி படத்தை தொடர்ந்து இந்த படத்தில் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் அவருடன் கனல் கண்ணன், ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப் பயிற்சிகளை கவனிக்க இருக்கிறார்கள்.


























