நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் பீஸ்ட். வரும் ஏப்ரல் 13ம் தேதி பான் இந்தியா படமாக இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 2ஆம் தேதி வெளியானது.

ஏற்கனவே இந்த படத்தில் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டிரெய்லருக்கு எதிர்பார்ப்பு மிகுதியாகவே இருந்தது.

இந்த நிலையில் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 24 மணிநேரத்தில் 29 மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு ஒரு புதிய சாதனையை படைத்தது. தற்போதைய நிலையில் 34 மில்லியன் பார்வையாளர்கள் இந்த டிரைலரை பார்த்து ரசித்துள்ளனர்.

ட்ரெய்லரில் ஒரு மாலுக்குள் சிக்கிக்கொண்ட பொதுமக்களை விஜய் காப்பாற்றுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்த படமும் இது தானா, இல்லை படத்தில் இது ஒரு சிறு பகுதியா என்கிற சந்தேகமும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மை.


























