V4UMEDIA
HomeNewsKollywoodவிஷால் நிறுவனத்தில் பெண் மோசடி செய்த வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு

விஷால் நிறுவனத்தில் பெண் மோசடி செய்த வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு

நடிகர் விஷால் கடந்த பல வருடங்களாக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்த ரம்யா என்பவர் ஊழியர்களின் சம்பளத்திற்கான வருமான வரி தொகை ரூபாய் 45 லட்சத்தை வருமான வரித்துறைக்கு செலுத்தியது போல போலி ஆவணங்களை காட்டி அந்த தொகையை தனது உறவினர்களின் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்ததாக அவர் மீது 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி முன்னாள் கணக்காளர் ரம்யா 20 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்தவும் தினமும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையொப்பமிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Most Popular

Recent Comments