HomeNewsKollywoodபிச்சைக்காரன் 2  ; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிகிலி vs ஆன்ட்டி பிகிலி

பிச்சைக்காரன் 2  ; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிகிலி vs ஆன்ட்டி பிகிலி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பிச்சைக்காரன். சொல்லப்போனால் விஜய் ஆண்டனிக்கு கமர்ஷியல் ஹீரோ என்கிற அந்தஸ்தையும் தாய்மார்களின் பேராதரவையும் பெற்று தந்த படம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

வெற்றிப்படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுப்பது என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது. அந்த வகையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகமும் இப்போது தயாராகிவருகிறது. இந்தப்படத்தை ஆச்சரியமாக விஜய் ஆண்டனியே இயக்குகிறார்.

சமீப நாட்களாக இந்தப்படத்தின் ஒரு அறிவிப்பு ரசிகர்களிடையே ஒரு குழப்பமான ஆச்சரியத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. பிகிலி என்கிற ஒரு வார்த்தை சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது..

யார் இந்த பிகிலி ? ஒருவேளை இது படமா ? இல்லை கதாபாத்திரமா ? என்கிற குழப்பம் நிலவி வந்தது. இந்தநிலையில் இதை தெளிவுபடுத்தும் விதமாக பிச்சைக்காரன் 2 படத்தில் ஆண்ட்டி பிகிலி கதாபாத்திரம் தான் விஜய் ஆண்டனி என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அப்படியானால் அவரது எதிரியான பிகிலி யார் என்கிற கேள்வியையும் கூடவே எழுப்பியுள்ளனர். எது எப்படியோ இந்த பிகிலியும் ஆண்ட்டி பிகிலியும் பிச்சைக்காரன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது என்பதே உண்மை.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments