V4UMEDIA
HomeNewsKollywoodஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு'

ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க.பெ.ரணசிங்கம் ஓடிடியில் வெளியானது. தற்போது அவர் தி கிரேட் இண்டியன் கிச்சன் என்ற மலையாள படத்தின் ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இந்த படம் ஓடிடி வெளியீட்டுக்கென்றே தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்துள்ள திட்டம் இரண்டு படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. வினோத் குமாரின் மினி ஸ்டுடியோஸ் & சிக்ஸ் என்டர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கிறார்கள் .தீஷ் ரகுநாதன் இசை அமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

கொரோனா 3வது அலை வீசாவிட்டால் தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்கள் திறக்கப்படாலாம். 3வது அலை வந்தால் எப்போது திறக்கப்படும் என்றே தெரியாத நிலை. இதனால் திட்டம் இரண்டு படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்பு இருக்கிறது.

Most Popular

Recent Comments