V4UMEDIA
HomeNewsKollywood'குருதி ஆட்டம்' படத்திற்கு டப்பிங் பணிகளை முடித்த பிரியா பவானி ஷங்கர்

‘குருதி ஆட்டம்’ படத்திற்கு டப்பிங் பணிகளை முடித்த பிரியா பவானி ஷங்கர்

8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தை தொடர்ந்து அதர்வா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘குருதி ஆட்டம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

படம் பூஜை போட்டு ஆரம்பித்து நாளிலிருந்து, பிரச்சனை மீது பிரச்சனை ஏற்பட்டது. பைனான்ஸ் காரணத்தால் சில மாதங்கள் தடைப்பட்டு இருந்தது பின் சரி செய்து படப்பிடிப்பு ஆரம்பித்தது. இப்படத்தின் நாயகனாக அதர்வாவும், நாயகியாக பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.
  


இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. முதலாவதாக பிரியா பவானி சங்கர் டப்பிங் பேசியுள்ளார். இன்று நடிகை ராதிகா டப்பிங் பேசியுள்ளார். ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments