தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய மெகாஹிட் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அஜய் ஞானமுத்து தற்போது சியான் விக்ரம் அவர்களை வைத்து “கோப்ரா” படத்தினை இயக்கியுள்ளார்.
சியான் விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்கும் விதமாக பல நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது ஊதியத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்து பெற்றுக்கொள்வதாக அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தில் 40சதவீதம் வரை குறைத்து கொள்வதாக கூறியுள்ளார்.


























