1998ம் ஆண்டு டி.ராஜேந்தரின் ‘மோனிஷா என் மோனலிசா’ படம் மூலம் அறிமுகமான மும்தாஜுக்கு சினிமாவில் இது 22ம் ஆண்டு. நடிகை மும்தாஜ் இன்று தனது பிறந்தநாளை கொன்டுகிறார்.
‘மோனிஷா என் மோனலிசா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மலபார் போலீஸ், தளபதி விஜய் யின் குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னதான் காதலா, சாக்லேட், வேதம், ஏழுமலை, ராஜாதி ராஜா போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி மற்றும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் vs கேல்ஸ் , மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக கலந்து கொண்டார். 2018ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
தனது கவர்ச்சி மற்றும் அழகான பேச்சாலும் ரசிகர்களை எப்போதுமே ஈர்ப்பார். தளபதி விஜய் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் குஷி படத்தில் வரும் “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடலுக்கும், சாக்லேட் படத்தில் வரும் “மல மல மருதமலை” மற்றும் ஏழுமலை படத்தில் வரும் “லக்ஸ் பாப்பா” பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டமும் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது.

பல பாலிவுட் நடிகைகள் கிளாமராக நடித்தாலும் மும்தாஜ்க்கு இன்று வரை இருக்கும் மவுசு எப்போதுமே தனி தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மும்தாஜ் !


























