V4UMEDIA
HomeNewsBollywoodகொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன் !

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன் !

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

அமிதாப் பச்சன் கடைசியாக ஷூஜித் சிர்காரின் நகைச்சுவை-படமான குலாபோ சித்தாபோவில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் நடித்தார். இந்த படம் ஆரம்பத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இது அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்றது.

Image


சில தினங்களுக்கு முன் அமிதாப் பச்சன் மருத்தவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இருப்பினும் அபிஷேக் பச்சன் இன்னும் கொரோனாவில் இருந்து குணமாகவில்லை என்றும் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் பெற்று வந்தார்.

A promise is a promise!
This afternoon I tested Covid-19 NEGATIVE!!! I told you guys I’d beat this. 💪🏽 thank you all for your prayers for me and my family. My eternal gratitude to the doctors and nursing staff at Nanavati hospital for all that they have done. 🙏🏽 THANK YOU!— Abhishek Bachchan (@juniorbachchan) August 8, 2020


இந்த நிலையில் அபிஷேக் பச்சன் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

” கொரோனா பாதிப்பை நான் வெல்வேன் என்று கூறினேன் ! அதேபோல் இன்று மதியம் எனக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எனக்கு நெகட்டிவ் வந்தது. எனக்காக பிரார்த்தனை செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி ! நானாவதி மருத்துவமனை மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ” என கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments