டப்பிங் ஆர்டிஸ்டாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக தன் கடின உழைப்பால் உயர்ந்தவர் சியான் விக்ரம். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலும் தனது நடிப்பு திறமையால் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சியான் விக்ரமை பிடிக்காதவர்கள் என யாரையும் கூற முடியாது.
விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் ‘கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.
விக்ரமின் 60வது திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பபை ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் என்றும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உலகின் பல நாடுகளில் எடுக்க திட்டமிட்டுள்ளர்கள் என கூறப்படுகிறது. இப்படத்தை லலித் குமார் பிரம்மாண்டமாக தயாரிகவுள்ளார்.
இந்த நிலையில் லாக்டவுன் நேரத்தில் தனது ஹாட்டான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் கார்த்திக் சுப்புராஜின் படத்திற்காக தங்களது உடலை மெருக்கேற்றி வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


























