V4UMEDIA
HomePR NewsCelebritiesமனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு இளையராஜா, கமல்ஹாசன், விஜய், குஷ்பு, சூர்யா மற்றும் பல பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற இயக்குனரும் திரைப்படத் தயாரிப்பாளருமான இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர்-இயக்குனர் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் மார்ச் 25-ஆம் தேதி அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 48. அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர். விஜய் மற்றும் சூர்யா நேரில் சென்று தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

இவருக்கு நந்தனா என்ற மனைவியும், அர்ஷிதா மற்றும் மதிவதனி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

மனோஜ் 1999-ஆம் ஆண்டில் தனது தந்தை பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ரியா சென் கதாநாயகியாக நடிக்க, மணிரத்னம் திரைக்கதை எழுதினார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மாறியது.

தாஜ்மஹாலைத் தொடர்ந்து, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லம் வசந்தம், கடல்பூக்கள், ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களில் மனோஜ் நடித்துள்ளார். 2023-ஆம் ஆண்டில், மார்கழி திங்கள் மூலம் இயக்குனராக அறிமுகமானார், இதில் அவரது தந்தை பாரதிராஜா, புதுமுகங்களான ஷ்யாம் செல்வன் மற்றும் ரக்ஷனா ஆகியோருடன் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்தார். பாரதிராஜா தான் இயக்கிய முதல் படமான பதினாறு வயதினிலே படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments