V4UMEDIA
HomeNewsKollywoodOTT-யில் வெளியாகும் தனுஷின் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்(NEEK)'!

OTT-யில் வெளியாகும் தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்(NEEK)’!

தனுஷ் அவர்கள் தயாரித்து இயக்கிய இன்றைய இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK)’, திரையரங்குகளில் வெளியாகி பார்வையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றது.

ஈர்க்கக்கூடிய கதைக்களம் கொண்ட இந்தப் படம், விரைவாக டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளத்திற்கு வந்துவிட்டது, பெரிய திரையில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ரசிகர்கள் இப்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தை தங்கள் வசதிக்கேற்ப எப்பொழுது வேண்டும்மென்றாலும் பார்க்கலாம். இத்திரைப்படம் பிப்ரவரி 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, அதன் வெற்றிகரமான திரையரங்கு ஓட்டத்தைத் தொடர்ந்து, படத்தின் OTT உரிமைகளை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியது, மார்ச் 21, 2025 முதல் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம் என்று தயாரிப்பாளர்கள் இப்போது அறிவித்துள்ளனர்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK) படத்தில் பவிஷ், ஒரு புதுமுகமாக இருந்தாலும், ஒரு நவீன கால இளைஞனின் உணர்ச்சிகளை எளிதாக சித்தரித்து, ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது நடிப்புத்திறன் மற்றும் உடல் மொழி அவரது கதாபாத்திரத்தை தொடர்புபடுத்தக் கூடியதாக உள்ளது. அனிகா சுரேந்திரன் அவரது பாத்திரத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி கனகச்சிதமாக பொருந்தியுள்ளார், மேலும் பவிஷுடனான அனிகாவின் கெமிஸ்ட்ரி படத்திற்கு ஒரு பலமாக அமைந்துள்ளது. பிரியா பிரகாஷ் வாரியர், சிறப்புத்தோற்றத்தில் நடித்து இருந்தாலும், ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அனிகாவின் தந்தையாக சரத் குமாரின் உணர்ச்சி பூர்வமான நடிப்பு, கதைக்கு ஆழத்தை சேர்க்கிறது. ரம்யா ரங்கநாதன் தனது இதயப்பூர்வமான நடிப்பால் தனித்து நிற்கிறார், அதே நேரத்தில் வெங்கடேஷ் மேனன், மேத்யூ தாமஸ் மற்றும் ராபியா கதூன் ஆகியோர் நகைச்சுவை காட்சிகளில் அவர்களது சிறப்புமிக்க நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, படத்தின் உணர்ச்சி ஆழத்தை உயர்த்துகிறது, முக்கிய தருணங்களை மேம்படுத்தும் ஒரு அற்புதமான பின்னணி இசையில் பாடல்கள் கதையுடன் தடையின்றி கலக்கின்றன, கதையின் நகர்வுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைதுள்ளது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? என்பது காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை கலந்து நவீன கால இளைஞர்களின் உறவுகளை பிரதிபலிக்கும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதல் கதை. ஒரு இயக்குனராக தனுஷ், காதல் மற்றும் மனவேதனையின் நுணுக்கங்களை யதார்த்தமான அணுகுமுறையுடன் படம்பிடித்து, இன்றையப் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு மாற்றுகிறார். நடிப்பு, தொழில்நுட்ப புத்திசாலித்தனம் மற்றும் ஈர்க்கும் திரைக்கதை ஆகியவை படத்தை ஒரு படி மேலே உயர்த்தியுள்ளது. நீங்கள் நல்ல காதல் திரைப்படங்களை ரசிக்கிறீர்கள் என்றால், இந்த படம் நிச்சயமாக உங்களை திருப்திப்படுத்தும்.

Most Popular

Recent Comments