இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் “ரெட்ரோ” படத்தின் BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு.

பீட்சா (2012), ஜிகர்தண்டா (2014), இறைவி (2016), மெர்குரி (2018), பேட்ட (2019), ஜகமே தந்திரம் (2021), மகான் (2022) மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (2023) போன்ற பாராட்டப்பட்ட படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு அடையாளமாக விளங்குபவர் எழுத்தாளர், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.


மேலும் ரத்ன குமார் இயக்கிய மேயாத மான், அசோக் வீரப்பன் இயக்கிய பஃபூன் போன்ற திறமையானா இயக்குனர்கள் உருவக தனது படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மூலம் துணைநின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மார்ச் 19, 2025 கார்த்திக் சுப்பராஜ் தனது 42-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதைக் குறிக்கும் வகையில், “ரெட்ரோ” படத்தின் BTS வீடியோ வெளியிடப்பட்டது, ரெட்ரோ என்பது மகான் பாணியில் ஒரு கேங்ஸ்டர் ஆக்ஷன் டிராமா படமாகும், மேலும் இந்த படம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் படமாகும். ரெட்ரோ திரைப்படம் மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.