Home News Kollywood கதாப்பாத்திரங்களின் தோற்றங்களை வெளியிட்டது ‘கூலி’ படக்குழு!

கதாப்பாத்திரங்களின் தோற்றங்களை வெளியிட்டது ‘கூலி’ படக்குழு!

கடந்த 2022-ஆம் ஆண்டு ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’- மற்றும் 2023-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் ‘தளபதி’ விஜய் அவர்களின் நடிப்பில் ‘லியோ’ ஆகிய திரைப்படங்களின் மூலம் மாபெரும் வெற்றி கண்டு, இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் அடுத்ததாக பிரம்மாண்ட கூட்டணியான சன் பிக்சர்ஸ் மற்றும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் உடன் இணைந்து படைக்கப் போகும் திரைப்படம் ‘கூலி’ஆகும்.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு காணொளி ஏப்ரல்-22-ஆம் தேதி வெளியானது.

அதன் பிறகு தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கு நடுவே படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாப்பாத்திரங்களின் அறிவிப்பு கடந்த சில நாட்களாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களின் மூலம் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது.

கடந்த 46-ஆண்டுகளாக தனக்கென தனி பாணியுடனும் புரட்சிகரமான கருத்துகளை கொண்ட திரைப்படங்கள் நடித்து புகழின் உச்சியில் வலம் வந்து இன்றைய இளம் தலைமுறை கலைஞர்களுக்கு போட்டியாக நடித்து கொண்டிருக்கும் ‘புரட்தி தமிழன்’ சத்யராஜ் அவர்கள் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் இன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகை ஆண்டு கொண்டிருக்கும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நாகர்ஜூனா ‘சைமன்’ மாறுபட்ட கதாபாத்திரத்தின் முதல் தோற்றமும் வெளியிடப் பட்டுள்ளது.

உலகநாயகனின் மகளும் பன்முகத் திறமையாளருமான ஷ்ருதிஹாசன் நடிக்கும் ‘ப்ரீத்தி’ என்ற கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் வெளியிடப் பட்டுள்ளது.

அந்த வகையில் மலையாளத் திரையுலகின் மகத்தான கலைஞனும், சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் கதாநாயகர்ளில் ஒருவரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சௌபின் சஹிர் ‘தயாள்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.